2025 ஜூலை 19, சனிக்கிழமை

கண்ணாமூச்சியில் இருவருக்கும் துயரம்

Freelancer   / 2023 ஜூன் 07 , பி.ப. 01:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதுடெல்லியின் ஜாமியா நகர் பகுதியில் வசித்துவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 வயதான சிறுவன் மற்றும்  6 வயதான சிறுமி ஆகியோர்,  செவ்வாய்க்கிழமை (06)மதிய உணவுக்கு பின்னர் காணாமல் போனார்கள்.

விளையாடச் சென்ற அண்ணனும் தங்கையும் இரவாகியும் வீடு திரும்பாதது கண்டு பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.

 கோடை விடுமுறையை முன்னிட்டு அப்பகுதியில் உள்ள குழந்தைகள் அனைவரும் கண்ணாமூச்சி ஆட்டம் விளையாண்டதாக தெரிவித்தனர். இத அடிப்படையில் குழந்தைகள் ஓடி ஒளிய வாய்ப்புள்ள இடங்கள் பலவற்றை, பகுதி மக்கள் திரளாக இரவு நெடுக தேடினர். எங்கே தேடியும் குழந்தைகள் கிடைக்காது போகவே, ’கடத்தப்பட்டிருக்கலாமோ’ என்ற ஐயத்தில் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.

 கடைசியாக அவர்களுடைய வீட்டில் ஒரு மரப்பெட்டியை சோதனையிட்டபோது அதிர்ச்சி அடைந்தனர்.

அளவில் பெரிய அந்த மரப்பெட்டியில் இருவரும் சடலங்களாக மீட்கப்பட்டனர்.  இருவரும் மூச்சுத்திணறி இறந்திருப்பதாக உறுதி செய்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X