2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

கண்ணீர் விட்டு அழுத வேட்பாளர்

Ilango Bharathy   / 2023 மே 14 , பி.ப. 03:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கர்நாடக சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று முன்தினம் எண்ணப்பட்டது.

இதில், காங்கிரஸ் 136 தொகுதிகளில் அமோக வெற்றிபெற்றுள்ளது. இதன் மூலம் தனிப்பெரும்பான்மையுடன் காங்கிரஸ் ஆட்சியமைக்கவுள்ளது.

பாரதிய ஜனதா கட்சி  66 தொகுதிகளை மாத்திரம்  கைப்பற்றி படுதோல்வியடைந்ததுடன் ஆட்சியையும் இழந்துள்ளது.

இந்நிலையில், இத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளரை விட 16 வாக்குகள் வித்தியாசத்தில் பா.ஜ.க வேட்பாளர் வெற்றிபெற்ற ருசிகர சம்பவமும் அரங்கேறியுள்ளது.

ஜெயாநகர் தொகுதியில் பா.ஜ.க வேட்பாளராக ராமமூர்த்தி, காங்கிரஸ் வேட்பாளராக சவுமியா, மதச்சார்பற்ற ஜனதா தளம் வேட்பாளராக கலிகவுடா போட்டியிட்டனர்.

இதில் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் ராமமூர்த்தி 57,797 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் சவுமியா 57, 781 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார்.

இந்நிலையில் 16 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்டதையடுத்து காங்கிரஸ் வேட்பாளர் சவுமியா கண்ணீர் விட்டு அழுதுகொண்டே வாக்கு எண்ணும் மையத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X