2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

கர்நாடகாவின் புதிய முதல்வர் யார்?

Editorial   / 2023 மே 14 , பி.ப. 02:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றதையடுத்து காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் பெங்களூருவில் இன்று (14) மாலை கூடுகிறது. இதில் புதிய முதல்வர் குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கர்நாடகாவில் உள்ள 224 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான‌ தேர்தல் கடந்த 10-ம் திகதி நடைபெற்றது. இதில் 73.19 சதவீத வாக்குகள் பதிவாகின. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

இதில் காங்கிரஸ் 136 தொகுதிகளில் அமோக வெற்றிபெற்றது. பாஜக 65 தொகுதிகளிலும், மஜத 19 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. பாரதிய ஜனதா கட்சி தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து, முதல்வர் பதவியை பசவராஜ் பொம்மை ராஜினாமா செய்தார்.

தனிப்பெரும்பான்மை பெற்றுள்ள காங்கிரஸ் கட்சியின் அடுத்த முதல்வர் யார் என்ற கேள்வி தற்போது மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது. கர்நாடக முன்னாள் முதல்வரும், கட்சியின் மூத்த தலைவருமான சித்தராமையாவுக்கும் கனகபுரா தொகுதியில் 1 லட்சத்து 21 ஆயிரத்து 595 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்ற கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமாருக்கும் இடையே முதல்வர் நாற்காலியை கைப்பற்றுவதில் கடும் போட்டி நிலவுகிறது. இருவரும் கட்சி மேலிடத்தின் முடிவுக்கு கட்டுப்படுவதாகத் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் புதிய முதல்வ‌ரை தேர்ந்தெடுப்பதற்காக இன்று (14) மாலை பெங்களூருவில் காங்கிரஸ் மேலிடத் தலைவர்கள் மற்றும் எம்எல்ஏக்களின் கூட்டம் நடைபெறுகிறது. இதில் அடுத்த முதல்வர் யார் என்ற அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், புதிய முதல்வரை தேர்ந்தெடுப்பதற்காக மூன்று பார்வையாளர்களை காங்கிரஸ் தலைமை நியமித்துள்ளது. இன்று நடைபெற உள்ள எம்எல்ஏக்கள் கூட்டத்தில் கலந்து கொள்ளும் அவர்கள், புதிய முதல்வரை தேர்வு செய்வது தொடர்பான அறிக்கையையும் கட்சி தலைமைக்கு அனுப்பி வைக்க உள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .