2025 ஜூலை 19, சனிக்கிழமை

கர்ப்பப்பையை குடலுடன் சேர்த்து தைத்த மருத்துவர்கள்

Freelancer   / 2023 ஜூன் 26 , மு.ப. 03:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடலூரில் சமீபத்தில் பிரசவத்துக்காக பெண்ணொருவர் அனுமதிக்கப்பட்ட நிலையில் அறுவை சிகிச்சை மூலம் அவருக்கு குழந்தை பிறந்தது. இதனை அடுத்து அறுவை சிகிச்சையின் போது கர்ப்பப்பையை குடலுடன் சேர்த்து மருத்துவர் தைத்து விட்டதாக கூறப்படுகிறது.

 இதனை அடுத்து பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் அரசு மருத்துவமனையில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.  

மேலும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தாங்கள் தற்கொலை செய்து கொள்ளப் போவதாகவும் தற்கொலைக்கு பின்ன தங்கள் உடல் உறுப்புகளை தானமாக எடுத்துக் கொள்ளுங்கள் என்றும் கூறி வருவது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் காவல்துறையினர் பெண்ணின் குடும்பத்தினரை சமாதானப்படுத்த முயற்சிகள் ஈடுபட்டு வருவதாகவும் தவறான அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க உறுதி அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X