2025 ஜூலை 19, சனிக்கிழமை

கற்க சென்ற மாணவனுக்கு 9 வருடகால சிறைத்தண்டணை

Freelancer   / 2023 ஜூன் 19 , பி.ப. 03:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்தில் கல்வி கற்று வரும் இந்திய மாணவர் ஒருவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் 9 வருடசிறைத்தண்டனை வழங்கியுள்ளது.

குறி்த்த மாணவன் இங்கிலாந்தில் இடம்பெற்ற விருந்து நிகழ்வொன்றில் கலந்துகொண்டுள்ளார் .அதன்போது விருந்தில் கலந்துகொண்ட யுவதி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்த குற்றச்சாட்டின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

20 வயது மதிக்கதக்க இளைஞன் குடிபோதையில் காணப்பட்ட குறித்த பெண்ணை தனது அறைக்கு துாக்கிச்சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

போதைதெளிந்து சுயநினைவு வந்ததன் பின் குறித்த பெண் பொலிஸாரிடம் முறைப்பாடினை முன்வைத்தன் அடிப்படையில் குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X