2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

கழிப்பறையில் சமைக்கும் பெண்

Ilango Bharathy   / 2021 செப்டெம்பர் 24 , பி.ப. 03:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெண்ணொருவர் வறுமையின் காரணமாக கழிப்பறையில் சமைத்து வரும் சம்பவம் இந்தியாவில் இடம்பெற்றுள்ளது.

தெலுங்கானா மாநிலம், மஹாபூப்நகர் மாவட்டத்தில் உள்ள பாலநகர் மண்டல் என்ற பகுதியைச் சேர்ந்தவர், சுஜாதா. இவரது கணவர் கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு மரணித்த நிலையில், தினமும் கூலி வேலைக்குச் சென்று தனி ஒரு ஆளாக தனது குடும்பத்தைக் கவனித்து வருகிறார்.

இந்நிலையில், கடந்த மூன்றரை ஆண்டுகளுக்கு முன்பு, பெய்த கன மழை காரணமாக, சுஜாதாவின் வீடு இடிந்து விழுந்தது. இதனால் தனது இரண்டு குழந்தைகள் மற்றும் மாமியாருடன், அரசு கட்டிய பொது கழிப்பறையில் தஞ்சம் அடைந்தார்.

தற்போது இரண்டு ஆண்டுகளாக அங்கு வசித்து வரும் அவர், மலம் கழிக்கும் பகுதியைக் கல் வைத்து மறைத்து, அதன் மேல் அடுப்பொன்றை வைத்து  சமைத்து வருவதாகக் கூறப்படுகின்றது.

இதுகுறித்துக் கண்ணீர் மல்கப் பேசிய சுஜாதா, ''தினமும் நானும் எனது மாமியாரும் கழிப்பறைக்கு வெளியே தான் உறங்குவோம் . எனது இரண்டு பிள்ளைகள் மட்டும் உள்ளே தூங்குவார்கள். மழைக் காலம் வந்து விட்டால் எனக்குத் தூங்கா இரவு தான். குழந்தைகளை மட்டும் படிக்க வைத்தால் போதும்'' எனக் கூறினார்.

இதனிடையே இச்செய்தி ஊடகங்களில் வெளியான நிலையில், பலர் சுஜாதாவுக்கு வீடு கட்டிக் கொடுக்க முன்வந்துள்ளனர் .

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X