Freelancer / 2024 மே 04 , பி.ப. 01:38 - 0 - {{hitsCtrl.values.hits}}

கடந்த சில தினங்களுக்கு முன், காங்கிரஸ் கிழக்கு மாவட்ட தலைவர் ஜெயக்குமார் மாயமானதாக புகார் எழுந்த நிலையில், தற்போது, எரிந்தநிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம் கரைச்சுத்து புதூரைச் சேர்ந்த காங்கிரஸ் கிழக்கு மாவட்ட தலைவர் ஜெயக்குமார் தனசிங். இவரை, கடந்த மே 2ஆம் திகதி முதல் காணவில்லை என அவரின் மகன் கருத்தையா ஜெஃப்ரின் உவரி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
இந்நிலையில், உவரி அருகே கரைசுத்துபுதூரில் உள்ள தோட்டத்தில் ஜெயக்குமார் தனசிங், உடல் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில், இது பற்றி பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன்னதாக, அவரின் கைப்படவே, எழுதிய கடிதத்தில், சிலர் தன்னை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்கள் என்று எழுதியுள்ளார். இதற்கிடையில், இவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளது அப்பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. S
3 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago