A.K.M. Ramzy / 2021 மார்ச் 14 , மு.ப. 10:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
புதுச்சேரி,
காங்கிரஸ் தொகுதிகளை தி.மு.க.வுக்கு ஒதுக்கியதற்காக எதிர்ப்பு தெரிவித்து கட்சி அலுவலகத்தை இழுத்துப் பூட்டி தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுவை காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணியில் மங்கலம் தொகுதி தி.மு.க.வுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த தொகுதியின் தி.மு. க. வேட்பாளராக சண்.குமாரவேல் அறிவிக்கப்பட்டு ள்ளார்.
ஏற்கனவே புதுவையில் காங்கிரஸ் கட்சிக்கு குறைந்த எண்ணிக் கையில் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதால் காங்கிரசார் அதிருப்தியில் இருந்து வருகின்றனர்.
இந்தநிலையில் மங்கலம் தொகுதி தி.மு.க.வுக்கு ஒதுக்கப்பட்டதால் ஆத்திரமடைந்த காங்கிரசார் நேற்று மாலை காங்கிரஸ் கட்சி அலுவலகத்துக்கு வந்தனர். கட்சி அலுவலகத்தின் கதவினை இழுத்துப்பூட்டி திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த தேர்தலில் போட்டியிட்டு காங்கிரஸ் வெற்றிபெற்ற காலாப்பட்டு, நெல்லித்தோப்பு, ராஜ்பவன், வில்லியனூர், பாகூர் போன்ற தொகுதிகளும் தி.மு.க.வுக்கு ஒதுக்கப்பட்டதால் அந்த தொகுதிகளை சேர்ந்த காங்கிரஸ் கட்சியினரும் அங்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள் காங்கிரஸ், தி.மு.க.வுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். முன்னணி தலைவர்கள் சமாதானப்படுத்தியும் அதை அவர்கள் ஏற்கவில்லை.
3 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago