2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

காதலிக்காக உயிரை மாய்த்த இளைஞர்

Ilango Bharathy   / 2022 நவம்பர் 30 , மு.ப. 09:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சென்னை, முகப்பேர் பகுதியைச்  சேர்ந்தவர் மோகன். 19 வயதான இவர் ஒரு தனியார் கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் பெற்றோர்கள் இல்லாத நேரத்தில் மோகன் தனது உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார். இதனையடுத்து வீடு திரும்பிய பெற்றோர் மகன் உயிரிழந்து கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து கதறி அழுதுள்ளனர்.

பின்னர் இது குறித்து பொலிஸாருக்குத் தெரியப்படுத்தியுள்ளனர். இந்நிலையில் இது தொடர்பில் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

மேகனின் தொலைபேசியினை பொலிஸார் ஆய்வு செய்த போது, அவர் தற்கொலை செய்வதற்கு முன்பாக பெண் ஒருவரிடம் பேசியுள்ளமை தெரியவந்துள்ளது.

இந்நிலையில் அப்பெண்ணைத் தொடர்பு கொண்ட போது , தான் தனியார் மருத்துவமனையொன்றில் செவிலிவராக பணிபுரிந்து வருவதாகவும்  கடந்த ஒன்றரை வருடங்களாக இருவரும் காதலித்து வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

 மேலும் தமக்கிடையில் அடிக்கடி சண்டைகள் ஏற்படுவதாகவும், இதன்போது ஒருவருக்கு ஒருவர், மாறி மாறி தற்கொலை செய்து கொள்ளப்போவதாக விளையாட்டாக மிரட்டி கொள்வதாகவும்  அதேபோல் தான், இன்றும் இருவருக்கும் சண்டை ஏற்பட்டதாகவும் ஒருகட்டத்தில்,எப்போதும் போல் தான் தற்கொலை செய்து போவதாக மோகன் கூறிவிட்டு இணைப்பைத் துண்டித்துள்ளார் எனவும் ” தெரிவித்துள்ளார்.

எனினும் அவர் விளையாட்டாகவே இவ்வாறு கூறுகின்றார் என  நினைத்தே  இதைனைத்  தான் கண்டுகொள்ளவில்லை என அப்பெண் கதறி அழுதவாறு தெரிவித்துள்ளார்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .