2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

காதலியை உயிரோடு எரித்த காதலன்

Ilango Bharathy   / 2023 ஜனவரி 06 , மு.ப. 09:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

திருப்பூர் மாவட்டம், பெத்தாம்பாளையம் காட்டுப்பகுதியில்  நேற்று முன்தினம் மாலை, உடலில் தீக்காயங்களுடன்  யுவதியொருவர் ”என்னைக் காப்பாற்றுங்கள்” என அலறியடித்தபடி பிரதான வீதிக்கு ஓடி வந்துள்ளார்.

இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் இது குறித்து உடனடியாகப் பொலிஸாருக்குத் தெரியப் படுத்தியுள்ளனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார்,அப்பெண்ணை மீட்டு வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இதற்கிடையில் அப்பெண்ணுக்கு தீ வைத்து விட்டு மோட்டார் சைக்கிளில் தப்பி செல்ல முயன்ற இளைஞரும் கீழே விழுந்து படுகாயமடைந்துள்ளார்.

இதனையடுத்து குறித்த இளைஞரை மீண்ட பொலிஸார் அவரையும் சிகிச்சைக்காக  வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இந்நிலையில் பொலிஸாரின் விசாரணையில் ” பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர் ‘பூஜா‘ எனவும், அவர் வடமாநிலத்தைச் சேர்ந்தவர் எனவும், தனது உறவினர் ஒருவரது வீட்டில் தங்கியிருந்து குறித்த பகுதியில் உள்ள தனியார் நிறுவனமொன்றில் பணிபுரிந்துவந்துளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அவர் ”அந்நிறுவனத்தில் பணியாற்றி வரும் லோகேஷ் என்பவரைக் காதலித்து வந்துள்ளார் எனவும், நாளடைவில் தன்னைத் திருமணம் செய்துகொள்ளும் படி லோகேஷை அவர் வற்புறுத்தி வந்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து அவரது வற்புறுத்தலால் ஆத்திரமடைந்த லோகேஷ், நேற்றுமுன்தினம்  தகுது மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த பெட்ரோலை பூஜா மீது ஊற்றி தீ வைத்துள்ளார் எனத் தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த பூஜா நேற்றைய தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .