Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Ilango Bharathy / 2022 டிசெம்பர் 14 , மு.ப. 09:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
'மாண்டஸ்' புயல் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளைப் பார்வையிடுவதற்காக அண்மையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காசிமேடு துறைமுகத்திற்கு வருகை தந்திருந்தார்.
இதன்போது அவரது கான்வாய் (convoy)வாகனத்தில் வருகை தந்த சென்னை மேயர் பிரியா, சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, சட்டமன்ற உறுப்பினர் எபினேசர் ஆகியோர், அவ்வாகனத்தில் தொங்கியவாறு பாதிக்கப்பட்ட பிரதேசங்களைப் பார்வையிட்டனர்.
இந்நிலையில் அவர்கள் தொங்கியவாறு வாகனத்தில் பயணம் செய்த வீடியோவானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
இதனைத் தொடர்ந்து இச்சம்பவம் தொடர்பில் அண்மையில் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த தமிழிசை", "கான்வாயில் ஆணுக்கு நிகராகச் சென்ற பெண்மேயரின் பணியைப் பாராட்ட வேண்டுமே தவிர, விமர்சிக்கக் கூடாது. மேயர் காரில் தொங்கியபடி சென்றது துடிப்பான செயல்" எனத் தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .