Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.K.M. Ramzy / 2021 நவம்பர் 03 , மு.ப. 10:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐதராபாத்:
தன்னுடன் படிக்கும் மாணவனை மிரட்டி, வீட்டிலிருந்து ஐந்து இலட்சம் ரூபாயை திருட வைத்த 13வயது சிறுவன் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
தெலுங்கானா தலைநகர் ஐதராபாதைச் சேர்ந்த ஒருவர், பழைய வாகனங்களை விற்கும் தொழில் செய்து வருகிறார். வாகனம் விற்ற வகையில் கிடைத்த 5 இலட்சம் ரூபாயை, தன் வீட்டு அலுமாரியில் வைத்திருந்தார்.இரண்டு நாட்களுக்கு பின், அலுமாரியை திறந்து பார்த்தபோது, அதிலிருந்த பணத்தைக் காணவில்லை.
இது குறித்து, தன் 13 வயது மகனிடம் விசாரித்தார். சரியாக பதில் சொல்லாததால் கோபம் அடைந்து, மகனை தகப்பன் அடித்துள்ளார். அப்போது அந்த சிறுவன், 'என்னுடன் படிக்கும் மாணவன் ஒருவன், என் புத்தகங்களை பறித்து விட்டான். வீட்டிலிருந்து 5 இலட்சம் ரூபாயை எடுத்து வந்து தந்தால் தான், புத்தகங்களை தருவேன் என மிரட்டினான்.'இதனால் வீட்டிலிருந்த 5இலட்சம் ரூபாயை திருடி அவனிடம் கொடுத்தேன்' என்றான்.
அதிர்ச்சியடைந்த தந்தை, இது குறித்துபொலிஸில் புகார் செய்தார். பணம் கேட்டு மிரட்டிய 13 வயது மாணவனிடம், அவனது குடும்பத்தார் முன்னிலையில் குழந்தைகள் நலத் துறை அதிகாரிகள் விசாரித்தனர்.
விசாரணையில், மாணவனை மிரட்டிப் பெற்ற 5 இலட்சம் ரூபாயை, தன் தாய் மற்றும் மாமாவிடம் கொடுத்ததை சிறுவன் ஒப்புக் கொண்டான்.
இதையடுத்து, பணத்தைக் கேட்டு மிரட்டியதாக சிறுவன் மீது வழக்கு பதிவு செய்த பொலிஸார், அவனது தாய் மற்றும் மாமா மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர்.அவர்களிடமிருந்து 5 இலட்சம் ரூபாயை மீட்கும் நடவடிக்கையிலும் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.
2 hours ago
6 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago
9 hours ago