2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

’காளி சர்ச்சைக்கு’ மன்னிப்பு கோரிய உக்ரேன்

Freelancer   / 2023 மே 02 , பி.ப. 03:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதுடெல்லி

உக்ரேனின் பாதுகாப்புத்துறை அமைச்சம் வெளியிட்ட காளிதேவி குறித்த சர்ச்சைக்குரிய ட்விட்டர் பதிவிற்காக, அந்நாட்டு துணை வெளியுறவுத்துறை அமைச்சர் எமின் தபரோவா   (மே 2) மன்னிப்பு கோரியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "உக்ரேன் பாதுகாப்பு அமைச்சகம் இந்து கடவுள் காளியை தவறான முறையில் சித்தரித்து ட்வீட் வெளியிட்டிருக்கிறது. நாங்கள் வருந்துகிறோம். உக்ரேன் மற்றும் அதன் மக்கள் இந்தியாவின் தனித்துவமான கலாசசாரத்தை மதிக்கிறது. சர்ச்சைக்குரிய அந்த ட்வீட் ஏற்கெனவே நீக்கப்பட்டுவிட்டது. இருதரப்பு உறவு மற்றும் நட்புறவை மேலும் அதிகப்படுத்துவதற்கு உக்ரேன் தீர்மானித்துள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

  உக்ரேன் பாதுகாப்புத் துறையால் நீக்கப்பட்டுள்ள சர்ச்சைக்குரிய ட்வீட்டில் இந்துக் கடவுளான காளி தவறான முறையில் சித்திரிக்கப்பட்டிருந்தார். கலை வேலைப்பாடு என்று தலைப்பிடப்பட்டிருந்த அந்த ட்விட்டர் பதிவில் இணைக்கப்பட்டிருந்த படங்கள் ஒன்றில், குண்டுவெடித்து வரும் புகையின் மேலே காளியின் படம் வைக்கப்பட்டிருந்தது.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X