2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

காவி உடை, விபூதியுடன் ‘அம்பேத்கர்‘

Ilango Bharathy   / 2022 டிசெம்பர் 08 , மு.ப. 09:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 சட்டமேதை அம்பேத்கரின் நினைவு தினம் நேற்றுமுன்தினம்(06)  இந்தியர்களால்  அனுசரிக்கப்பட்டது.

 இதனையொட்டி பல்வேறு  அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் அம்பேத்கரின் சிலை மற்றும் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வந்தனர்.

 இந்நிலையில் தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில், இந்து மக்கள் கட்சி சார்பில், ஒட்டப்பட்ட போஸ்டரில் 'காவி(ய) தலைவனின் புகழை போற்றுவோம்' என எழுதப்பட்டிருந்ததோடு  காவி உடை, விபூதி பூசி, குங்குமம் வைக்கப்பட்ட அம்பேத்கரின்  உருவப்படமும் அச்சிடப்பட்டிருந்தது. 

இப்போஸ்டரானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், இதற்கு எதிர்ப்புத்  தெரிவித்து விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு உள்ளிட்ட கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டன.

இதனையடுத்து  இப்போஸ்டர் ஒட்டப்பட்டமை தொடர்பில்  இந்து மக்கள் கட்சி மாநில பொதுச்செயலாளர் குருமூர்த்தியை பொலிஸார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .