2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

கிணற்றுக்குள் தவறி விழுந்துள்ள குழந்தை

A.K.M. Ramzy   / 2021 செப்டெம்பர் 14 , மு.ப. 11:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

 சென்னை

இந்தியாவின் சில மாநிலங்களில்,பல்வேறு வகையான சம்பவங்கள் இடம்பெறுகின்றன. இதற்கு சில காரணகர்த்தாவாக பெற்றோர்களின் கவனயீனமே காரணமாக இருக்கின்றன.

 சென்னை அம்பத்தூர் அருகேயுள்ள  கொரட்டூரில் கிணற்றில் தவறி விழுந்து ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அம்பத்தூரை அடுத்த கொரட்டூர், சிவலிங்கபுரத்தைச் சேர்ந்த  கூலித் தொழில் செய்யும் குடும்பத்தில்  ஒன்றை வயது ஆண் குழந்தை யொன்று இருந்தது. இந்நிலையில், குழந்தை அடிக்கடி வீட்டு பின்புறம் உள்ள காலி இடத்தில் விளையாடுவது வழக்கம். இந்நிலையில், இன்று குழந்தை   வீட்டுக்கு பின்புறம் உள்ள தரையுடன் ஒட்டிய கிணற்றுக்கு அருகில் விளையாடி கொண்டிருந்தான். அப்போது, எதிர்பாராதவிதமாக கிணற்றுக்குள் தவறி விழுந்துள்ளான். இதை பார்த்த, அவரது தந்தை  அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கிணற்றுக்குள் குதித்துள்ளார்.

பின்னர் தந்தை குழந்தையை மீட்டு ரெட்டேரியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்தனர். தகவல் அறிந்த பொலிஸார்  சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .