2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

குடிமகன்களுக்கு குதூகல தகவல் வெளிட்ட கேரளா

Freelancer   / 2021 செப்டெம்பர் 26 , பி.ப. 09:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

இரண்டு டோஸ் தடுப்பூசி பெற்றுக்கொண்டவர்கள் பார்களில் அமர்ந்து மது அருந்தலாம் என்ற அறிவிப்பை கேரள அரசு வெளியிட்டுள்ளது. 

ஏற்கெனவே ஒரு டோஸ் தடுப்பூசி பெற்றுக்கொண்ட சான்றிதழ் அல்லது அன்டிஜன் மற்றும் பிசிஆர் பரிசோதனையில் தொற்று ஏற்றபடவிடின் சான்றிதழுடன் செல்லும் குடிமகன்களுக்கு மட்டுமே மதுக்கடைகளில் மது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. 

இந்த நிலையில் நேற்று மாலை புதிய அறிவிப்புகளை முதலமைச்சர் பினராயி விஜயன் வெளியிட்டார்.

அதில் அவர் குறிப்பிட்டதாவது,

இரண்டு டோஸ் தடுப்பூசி பெற்றுக்கொண்டவர்கள் பார்களிலும், ஹோட்டல்களிலும் உள்ளே அமர்ந்து மது அருந்தலாம். இரண்டு டோஸ் தடுப்பூசி போட்ட தொழிலாளர்களை இந்த ஸ்தாபனங்களில் வேலையில் ஈடுபடுத்த வேண்டும். ஹோட்டல் மற்றும் பார்களில் ஐம்பது சதவீதம் இருக்கைகளில் மட்டுமே வாடிக்கையாளர்களை அனுமதிக்க வேண்டும். 

உள்ளக அரங்கங்கள், நீச்சல் தடாகங்களைத் திறக்கலாம். அதில் பயிற்சி அளிப்பவர்களும், பயிற்சி எடுத்துக்கொள்பவர்களும் இரண்டு டோஸ் தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்களாக இருக்க வேண்டும். இவற்றில் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு வாக்சின் பற்றிய பிரச்னை இல்லை.

இன்னும் சில வாரங்களில் பாடசாலைகள் திறக்கப்படும். மாணவர்களுக்குப் பாதுகாப்பு குறித்து ஆலோசித்து வருகிறோம். மாணவர்கள் பயணிக்கும் வாகனங்களின் சாரதிகள் குறைந்தது பத்து ஆண்டுகள் அனுபவம் வாய்ந்தவர்களாக இருக்க வேண்டும். மாணவர்கள் பாதுகாப்புக்காக ஒரு ஆசிரியர் தனியாக நியமிக்கப்பட வேண்டும். வைத்தியர்கள் மாணவர்களை கண்காணிப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .