2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

குரங்கின் தரிசனத்திற்காக காத்துக்கிடக்கும் பக்தர்கள்

Freelancer   / 2023 ஓகஸ்ட் 21 , பி.ப. 07:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொதுவாக கோவிலுக்கு செல்லும்போது ஒவ்வொரு கோவிலிலும் தனிச்சிறப்பு வாய்ந்த ஒரு சில அம்சங்கள் இருக்கும். ஒரு சில கோவிலில் மூலவர் என்று வணங்கப்படும் தெய்வத்தை விட உப தெய்வங்கள் அல்லது வெளிப்பிராகரங்களில் இருக்கும் பிரசித்தி பெற்றிருக்கும் தெய்வங்களுக்கு அர்ச்சனை பூஜை செய்வது பரிகாரமாகவும் விளங்கும். அந்தவகையில் லக்னோவில் இருக்கும் புகழ்பெற்ற ஓர் ஆஞ்சநேயர் கோவில், ஆஞ்சநேயரை விட அந்த கோயிலில் இருக்கும் ஒரு குட்டிக் குரங்கின் தரிசனம் செய்வதற்கு நூற்றுக்கணக்கான பக்தர்கள் தினசரி கோவிலுக்கு வருகிறார்கள்.

கோவிலுக்கு இவர்கள் வருவதற்கு மிக முக்கியமான காரணமே ஒரு குட்டி குரங்கு தானாம். லிட்டில் பஜ்ரங்கி என்று பரவலாக அழைக்கப்படும் இந்த குட்டி குரங்கின் தரிசனம் கிடைப்பதற்காகவே வெகு தூரத்திலிருந்து கூட பக்தர்கள் இந்த கோவிலுக்கு வருகிறார்கள்.

அதுமட்டுமல்லாமல் ஒரு சிலர் இந்த குட்டி குரங்கை தினமும் தரிசனம் செய்வதற்காக தினமும் இங்கு வருகை தருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. பக்தர்களை ஏமாற்றாமல் இந்த குட்டி குரங்கும் பக்தர்களின் முன்வந்து அவர்களை ஆசிர்வதித்து செல்கிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X