Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Ilango Bharathy / 2022 டிசெம்பர் 08 , மு.ப. 09:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
அம்புலன்ஸில் குழந்தைகளைக் கடத்தி, விற்பனை செய்து வந்த 7 பேரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பஞ்சாப் , சண்டிகர் பகுதியிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
”பஞ்சாப்பில் ஏழைப் பெற்றோர்களிடம் இருந்து குறைந்த விலைக்கு குழந்தைகளை வாங்கி, குழந்தைகள் இல்லாத தம்பதிகளுக்கு, ஒரு கும்பல் விற்பனை செய்து வருவதாகப்” பொலிஸாருக்குக் கிடைத்த ரகசியத் தகவலையடுத்தே இச்சம்பவம் அம்பலமாகியுள்ளது,
இது தொடர்பில் தீவிர தேடுதலில் இறங்கிய பொலிஸார் ,பல்ஜிந்தர் சிங், அமந்தீப் கவுர், லலித் குமார், புபிந்தர் கவுர், சுஜிதா, ஹர்ப்ரீத் சிங் மற்றும் சுக்விந்தர் சிங் ஆகியோரைக் கைது செய்துள்ளனர்.
இதன்போது அவர்களிடம் இருந்து, புதிதாகப் பிறந்த இரண்டு குழந்தைகள்,கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட அம்புலன்ஸ், 4 லட்சம் ரூபாய் பணம், என்பவற்றைப் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .