2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

குழந்தையை அடித்துக் கொன்ற தாய்

Freelancer   / 2021 செப்டெம்பர் 23 , பி.ப. 04:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

சத்தீஸ்கர் மாநிலத்திலுள்ள கோர்பா மாவட்டத்தில் தாயொருவர் தனது இரண்டு வயது குழந்தையை அடித்துக் கொலை செய்துள்ளார்.

தனது குழந்தையின் பசிக்காக அடிக்கடி தாய்ப்பால் கொடுக்கவேண்டி  இருப்பதால் ஆத்திரமடைந்த அந்த தாய், தனது குழந்தை என்றும் பாராமல் வீட்டின் தரையோடு சேர்த்து பலமாக அடித்துள்ளார்.

இதனால் படுகாயமடைந்த குழந்தை  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.

குழந்தையை கொலை செய்த அந்த தாய், மனநலம் பாதிக்கப்பட்டதும், கடந்த 2014 முதல் உளவியல் பிரச்சினைக்காக சிகிச்சை எடுத்து வந்ததாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் அந்த பெண் மீது பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .