2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

குழப்பும் குரங்குகளை பயமுறுத்த லாங்கூர் ஒலி

Editorial   / 2023 ஓகஸ்ட் 30 , பி.ப. 02:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதுடெல்லியில் ஜி 20 மாநாடு நடைபெற உள்ள நிலையில், குரங்குகள் அட்டகாசத்தைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

லுடியன்ஸ் பகுதியில் ஏராளமான குரங்குகள் உள்ளன. இந்த பகுதி பொதுமக்களை குரங்குகள் அடிக்கடி கடித்து வைக்கும் சம்பவம் நடைபெற்று வருகிறது.

இதனைக் கருத்தில் கொண்டு   வனத்துறையினர் செப்டம்பர் 9 மற்றும் 10 ஆகிய திகதிகளில் நடைபெற உள்ள ஜி 20 மாநாட்டிற்கு குரங்குகள் இடையூறு செய்யாதவாறு தடுப்பு நடவடிக்கையில் இறங்கியுள்ளன.

இதற்காக பயிற்சி பெற்ற 30, 40 பேர் லாங்கூர் சத்தம் எழுப்பி குரங்குகளைப் பயமுறுத்தும் நடவடிக்கையில் ஈடுபடுவார்கள். இந்த நிகழ்ச்சி நடைபெறும் இடங்களுக்கு அருகில் இவர்கள் நிறுத்தப்படுவார்கள்

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X