2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

கொடநாடு வழக்கு: தொடர்கிறது தனிப்படை விசாரணை

Freelancer   / 2021 செப்டெம்பர் 23 , பி.ப. 06:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கில் 8 மற்றும் 9ஆவது சந்தேகநபர்களாக குற்றச்சாட்டப்பட்டுள்ள சந்தோஷ் சாமி, மனோஜ் சாமியிடம் தனிப்படை பொலிஸார் 2ஆவது நாளாக விசாரணை நடத்தி வருகின்றனர். 

உதகை மண்டலத்தில் (ஊட்டி) உள்ள பழைய காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இருவரிடமும் நேற்று 10 மணி நேரம் விசாரணை நடைபெற்றது.

இதனைத்தொடர்ந்து இவ்வழக்கு தொடர்பாக இரண்டாவது நாளான இன்றும் சந்தோஷ் சாமி, மனோஜ் சாமியிடம் ஏடிஎஸ்பி கிருஷ்ணமூர்த்தி, டிஎஸ்பிக்கள் சந்திர சேகர், சுரேஷ் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள சதீஷன், பிஜின் குட்டி ஆகியோர் விசாரணைக்கு ஆஜராகியிருந்தனர். ஏற்கெனவே, 29 பேர் விசாரிக்கப்பட்ட நிலையில், குற்றச்சாட்டப்பட்டோரிடம் தனிப்படை பொலிஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .