2025 மே 01, வியாழக்கிழமை

கொல்கத்தா ஹோட்டலில் தீ விபத்து;14 பேர் பலி

R.Tharaniya   / 2025 ஏப்ரல் 30 , பி.ப. 12:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொகத்தாவில் ஹோட்டல் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 14 பேர் பலியாகினர்.

இது பற்றிய விவரம் வருமாறு....

புர்ராபஜார் மெச்சுவா பழச்சந்தை பகுதியில் ஹோட்டல் ஒன்று அமைந்துள்ளது. இந்த ஹோட்டலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

இதை அறிந்த ஊழியர் ஒருவர் தப்பிக்க எண்ணி, மேலிருந்து குதித்து இறந்தார். தீ விபத்து அறிந்த தீயணைப்பு துறையினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.கொழுந்துவிட்டு எரிந்த தீயை அவர்கள் அணைக்கும் பணியில் இறங்கினர். சிறிது நேர போராட்டத்திற்கு பின்னர் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

அதன் பின்னர் ஹோட்டலில் அவர்கள் சென்று பார்த்த போது உள்ளே, வெவ்வேறு அறைகளில் 14 பேர் பலியானதை கண்டறிந்தனர்.

இது குறித்து பேசிய போலிஸ் அதிகாரி மனோஜ் வர்மா, மொத்தம் 14 உடல்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. பலர் மீட்கப்பட்டுள்ளனர். சம்பவம் குறித்து விசாரிக்க ஒரு சிறப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது. விசாரணை நடந்து வருகிறது என்றார்.

இதனிடையே இந்த தீ விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 3 பேர் பலியாகி உள்ள விவரம் வெளியாகி இருக்கிறது. கரூர் மாவட்டம் உப்பிடமங்கலத்தைச் சேர்ந்த தொழிலதிபர் பிரபு, குழந்தைகள் என 3 பேர் உயிரிழந்தது தெரிய வந்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .