Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 10, வியாழக்கிழமை
Freelancer / 2024 மே 27 , பி.ப. 12:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆந்திர மாநிலம் திருப்பதி சென்று விட்டு, வீடு திரும்பியவர்களின் கார் இன்று அதிகாலை விபத்துக்குள்ளாகி நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ஆந்திராவின் மற்றொரு பகுதியில் ஏற்பட்ட சாலை விபத்தில் சம்பவ இடத்திலேயே மேலும் 4 பேர் உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
திண்டுக்கல் மாவட்டம் நல்லபெம்மன்பட்டியைச் சேர்ந்தவர் சாமிநாதன். இவர் தன்னுடைய குடும்ப உறுப்பினர்கள் சத்யா, ராகேஷ், ராதாபிரியா, கோபி ஆகியோருடன் ஆந்திராவின் கிழக்கு கோதாவரி மாவட்டம் கொவ்வூரில் உள்ள உறவினர் வீட்டிற்குச் சென்றுள்ளனர்.
பின்னர் மீண்டும் சொந்த ஊர் திரும்பிக் கொண்டிருந்த போது, கிருஷ்ணா மாவட்டம் பாபுலபாடு மண்டலம் கொடுருபாடு என்ற இடத்தில் அவர்கள் பயணித்த கார் லொரி மீது மோதியது.
இதில் ஏற்பட்ட கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர். சாமிநாதனின் மனைவி சத்யா படுகாயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.S
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
17 minute ago
25 minute ago
32 minute ago