A.K.M. Ramzy / 2021 மார்ச் 28 , மு.ப. 07:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியா
கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரை தொடர்ந்து, கிரிக்கெட் வீரர் யூசுப் பதானுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர் "கொரோனா அறிகுறிகள் லேசாக இருந்ததால் பரிசோதனை மேற்கொண் டேன். அதில் கொரோனா தொற்று உறுதியானது.
இதனையடுத்து நான் வீட்டிலேயே என்னை தனிமைப்படுத்திக் கொண்டேன். தேவையான மருத்துவ உதவிகள் எனக்கு வழங்கப்பட்டு வருகிறது. என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்" என பதிவிட்டுள்ளார்.
சச்சின் மற்றும் யூசுப் பதான் உள்ளிட்டோர் இந்தியா லெஜண்ட்ஸ் அணி சார்பில் அண்மையில் நடைபெற்ற ரோட் சேஃப்டி கிரிக்கெட் தொடரில் விளையாடியது குறிப்பிடத்தக்கது.
44 minute ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
4 hours ago