A.K.M. Ramzy / 2021 மார்ச் 08 , மு.ப. 06:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
முசாபர்நகர்,
வேளாண் சட்டங்களை திரும்பப்பெறும் வரை விவசாயிகளின் போராட்டம் தொடரும் என பாரதிய கிசான் அமைப்பு தலைவர் ராகேஷ் திகாயத் தெரிவித்துள்ளார்.
வேளாண் துறையை சீர்திருத்தும் நோக்கில் 3 புதிய சட்டங்களை மத்திய அரசு கடந்த ஆண்டு நிறைவேற்றியது. இவை விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் எனக்கூறி வரும் அரசு, அவர்களுக்கு சிறந்த வாய்ப்புகளையும் வழங்கும் எனவும் உறுதியுடன் கூறி வருகிறது.
ஆனால் இந்த சட்டங்களால் வேளாண் துறை பெருநிறுவனங் களின் கையில் சென்று விடும் என அச்சம் தெரிவித்து வரும் விவசாயிகள், இந்த சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என போராடி வருகின்றனர்.
குறிப்பாக பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லியின் எல்லைகளில் முற்றுகை போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுடன் மத்திய அரசு 11 சுற்றுகள் பேச்சுவார்த்தை நடத்தியும் போராட்டத்துக்கு தீர்வு ஏற்படவில்லை.
இதனால் மிகுந்த தீவிரமாக நடந்து வரும் இந்த போராட்டம் 100ஆவது நாளை கடந்து விட்டது. இதையொட்டி நேற்று உத்தரபிரதேசத்தின் முசாபர்நகரில் நடந்த டிராக்டர் பேரணி ஒன்றை பாரதிய கிசான் அமைப்பு தலைவர் ராகேஷ் திகாயத் தொடங்கி வைத்து பேசினார்.
27 minute ago
45 minute ago
57 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
45 minute ago
57 minute ago
1 hours ago