2025 ஜூலை 19, சனிக்கிழமை

சந்தேக நபரிடம் வீராங்கனையை கூட்டிச் சென்ற பொலிஸ்

Simrith   / 2023 ஜூன் 11 , பி.ப. 01:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாலியல் துன்புறுத்தல் குற்றத்தை எப்படிச் செய்தார் என்பதை விவரித்துக் காட்டும் பொருட்டு வீராங்கனை சங்கீதா போகத்தை குற்றம்சாட்டப்படுள்ள பிரிஜ் பூஷன் வீட்டிற்கு டெல்லி போலீஸ் அழைத்துச் சென்ற சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி பொலிஸாரின் இந்த நடவடிக்கை குறித்தும், இதில் தொடர்புடைய அதிகாரிகள் மீதும் உடனடியாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என டெல்லி மகளிர் ஆணையத்தின் தலைவி ஸ்வாதி மாலிவாலை திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் சாகேத் கோகலே வலியுறுத்தியுள்ளார்.

மேலும், பாலியல் சீண்டலை எப்படிச் செய்தார் என்பதை மீண்டும் விவரித்துக் காட்டச் சொல்லிய இந்த நடவடிக்கையின் மூலம், டெல்லி காவல்துறை சங்கீதா போகத்தின் மனதில் அவருக்கு நடந்த பாலியல் துன்புறுத்தல் அதிர்ச்சியை மீள்உருவாக்கம் செய்துள்ளது. இது பாலியல் துன்புறுத்தலினால் பாதிக்கப்பட்ட அவரின் அடிப்படை உரிமைகளை மீறும் ஒரு செயலாகும்.

இதன் மூலமாக, புகார்தாரர், துன்புறுத்தலால் பாதிக்கப்பட்டவரின் மனதில் ஓர் அச்ச உணர்வினை ஏற்படுத்தும் ஒரு செயலை டெல்லி போலீஸ் உருவாக்க முயற்சி செய்வது தெளிவாகிறது. பாலியல் துன்புறுத்தல் குற்றம்சாட்டப்பட்டு அதற்காக இன்னும் கைது செய்யப்படாத ஒருவரின் வீட்டிற்கு அவரால் பாதிக்கப்பட்ட ஒருவரை அழைத்துச் சென்றிருப்பதன் மூலம் இந்த உண்மை உறுதியாகியிருக்கிறது". இவ்வாறு சாகேத் கோகலே தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X