2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

சார்ஜரில் சிறுமியை கர்ப்பமாக்கிய சாரதி

Editorial   / 2021 செப்டெம்பர் 06 , பி.ப. 06:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதுச்சேரி

 புதுச்சேரி நகரப் பகுதியில்பாடசாலையில்  பத்தாம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுமிக்கு, கடந்த சில நாட்களுக்கு முன் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அதையடுத்து, சிறுமியை, மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

மருத்துவப் பரிசோதனையில், சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரிந்தது. அதிர்ச்சியடைந்த பெற்றோர் சிறுமியிடம் விசாரித்ததில், பக்கத்து வீட்டை சேர்ந்த சாரதியொருவர்  மிரட்டி, கடந்த மூன்று மாதமாக பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்தது. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் ரெட்டியார்பாளையம் பொலிஸில் புகார் அளித்தனர்.

பொலிஸார்  'போக்சோ' சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து,   கைது செய்து, காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.

இது குறித்து பொலிஸார் கூறுகையில், 'சிறுமியின் பெற்றோர் இருவரும் கூலி வேலைக்கு செல்வர். ஊரடங்கினால் பாடசாலைக்கு செல்லாமல் சிறுமி வீட்டில் தனியாக இருந்து வந்தார்.பக்கத்து வீட்டில் வசிக்கும் சாரதி,கையடக் தொலைபேசியின் சார்ஜர் வாங்குவது போன்று அடிக்கடி சிறுமியின் வீட்டிற்கு சென்று, மிரட்டி, பலாத்காரம் செய்துள்ளார். சாரதிக்கு திருமணமாகி, 4 வயதில் பெண் குழந்தை உள்ளது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .