Editorial / 2023 ஜூலை 02 , மு.ப. 11:38 - 0 - {{hitsCtrl.values.hits}}

விவசாயி ஒருவர் சிங்கத்தை கல்லால் விரட்டி துரத்தியுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி, நெட்டிசன்களின் பாராட்டுகளை பெற்று வருகிறது.
இந்த வீடியோவை குஜராத் மாநிலம் ஜுனாகத் கேஷோத் நகரின் கவுன்சிலர் விவேக் கொட்டாடியா ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். கிர் சோம்நாத் மாவட்டத்தில் சிங்கம் பசுவின் மீது பாய்ந்தபோது இந்த சம்பவம் நடந்ததாக அவர் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார்.
வீடியோ கிளிப்பின் தொடக்கத்தில், சிங்கத்தின் பிடியில் மாடு சிக்கியிருப்பது தெரிகிறது. மூர்க்கமான சிங்கத்தின் வலுவான தாடை பசுவின் கழுத்தைப் பற்றிக்கொண்டது. சிங்கத்தின் பிடியில் இருந்து வெளியேற பசு தன்னால் இயன்றவரை முயற்சி செய்த நிலையிலும் அதன் முயற்சிகள் தோல்வியடைந்தன. அச்சமயம் மாட்டை வளர்த்த விவசாயி இதை கவனித்து தனது மாட்டை காப்பற்ற தீரமான செயலில் இறங்கினார்.
சில அடி தூரத்தில் நின்ற அந்த விவசாயி கூச்சலிட்டு சிங்கத்தை விரட்டுகிறார். இதை கவனித்த சிங்கம், மாட்டை புதருக்குள் இழுத்து செல்ல முயற்சிக்கிறது. ஆனால், மனம் தளராத விவசாயி அங்கிருந்த கல் ஒன்றை எடுத்து சிங்கத்தை நோக்கி ஓடி விரட்டி துரத்துகிறார். அச்சத்தில் சிங்கம் மாட்டை விட்டு சென்று பின்வாங்கி புதருக்குள் மறைந்தது. இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.
விவசாயின் தைரியத்தை பலரும் ஆச்சரியத்துடன் பாராட்டி வருகின்றனர். அதேவேளை, ஒருவேளை சிங்கம் பின்வாங்காமல் விவசாயியை தாக்கியிருந்தால் நிலைமை விபரீதமாக ஆகியிருக்கும் என சிலர் கவலை தெரிவித்தனர். மனிதன் - விலங்கு மோதல்களை தடுக்கும் விதமான விழிப்புணர்வுகளை முன்னெடுக்க வேண்டும் என விலங்குகள் ஆர்வளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
17 minute ago
26 minute ago
45 minute ago
58 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
26 minute ago
45 minute ago
58 minute ago