2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

சிறுமியின் உடலை அடக்கம் செய்வதை தடுத்த வெள்ளம்

Freelancer   / 2023 செப்டெம்பர் 14 , பி.ப. 03:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆந்திரா மாநிலம் மீஞ்சி புட் மண்டலம், தும்மிடி புட் மலை கிராமத்தில் 550 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

 இந்த கிராமத்தை சிறுமியொருவர், உடல்நல குறைவால் கடந்த 11ஆம் திகதி  உயிரிழந்துள்ளார். மலை கிராமத்தில் சாலை வசதிகள்  இல்லாததால் கிராமத்தின் குறுக்கே செல்லும் ஆற்றைக் கடந்து சிறுமியின் உடலை எடுத்துச் சென்று அடக்கம் செய்ய வேண்டும்.

ஆனால் கடந்த 4 நாட்களாக பெய்த பலத்த மழையின் காரணமாக ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சிறுமியின் உடலை அடக்கம் செய்ய முடியாமல் கிராம மக்கள் அவதி அடைந்தனர்.

3 நாட்களாக வீட்டிலேயே உடலை வைத்திருந்தனர். ஓரளவு ஆற்றில் வெள்ளம் குறைந்ததும் சிறுமின் உடலை சுமந்து சென்று ஆற்று வெள்ளத்தை கடந்து. 3 நாட்களுக்கு பிறகு சிறுமி உடலை அடக்கம் செய்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X