2025 ஜூலை 19, சனிக்கிழமை

சிறுவனுக்கு பெண் பாலியல் சீண்டல்

Janu   / 2023 ஜூன் 06 , மு.ப. 01:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

குழந்தைகள் காப்பகத்தில் தன் பாதுகாப்பில் இருந்த  சிறுவனிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார் என்றக் குற்றச்சாட்டின் கீழ் அந்த காப்பகத்தின் பெண் காப்பாளர் (வயது 40) போக்சோ  சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

நாகை காடம்பாடி பகுதியில் மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகம் அருகில் பிரபல தனியார் குழந்தைகள் காப்பகம் செயல்பட்டு வருகிறது.  

இந்த காப்பகத்தில் காப்பாளராக சீர்காழியைச் சேர்ந்த பெண்ணொருவர்  பணியாற்றி வருகிறார். இவரது பராமரிப்பில்   12 வயது சிறுவன் உள்ளிட்ட மூன்று பேர் ஒரு வீட்டில் குடும்பமாக வசித்து வருகின்றனர். இந்த நிலையில் காப்பகத்தில் இருந்து 12 வயது சிறுவன் சுவர் ஏறிக்  குதித்து தப்பிக்க முயற்சி செய்துள்ளார். அதனைப் பார்த்த காப்பக நிர்வாகிகள் சிறுவனை அழைத்து விசாரித்துள்ளனர். 

அப்​போதே, அப்பெண்ணின் பாலியல் சீண்டல் வெளிச்சத்துக்கு வந்தது. இதுதொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து அப்பெண்ணை கைது செய்த பொலிஸார், நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் விளக்கமறியலில் வைத்துள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X