Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2022 டிசெம்பர் 07 , பி.ப. 06:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஸ்டேட் பேங்க் ஒஃப் இந்தியா, ஐசிஐசிஐ வங்கி, ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் பேங்க் மற்றும் யெஸ் பேங்க் ஆகிய நான்கு வங்கிகளுடன் சில்லறை டிஜிட்டல் ரூபாய் சோதனைத் திட்டம் டிசெம்பர் 1 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
மும்பை, புதுடெல்லி, பெங்களூரு மற்றும் புவனேஸ்வரில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டதாகவும் வங்கி அறிவித்துள்ளது.
ஜிட்டல் ரூபாய் என்பது ரிசர்வ் வங்கியின் டிஜிட்டல் நாணயமாகும் என்பதுடன், இதை நவம்பர் மாத தொடக்கத்தில் அரசாங்கப் பத்திரங்களில் மொத்தப் பரிவர்த்தனைகளுக்காக வங்கி அறிமுகப்படுத்தியது.
தற்போது காகித மற்றும் நாணயங்கள் வெளியிடப்படும் அதே மதிப்புகளில் இது வெளியிடப்படும் என்று ரிசர்வ் வங்கி ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
காகித நாணயத்தைப் போலவே, டிஜிட்டல் ரூபாய் வங்கிகள் மூலம் விநியோகிக்கப்படும் என்றும் பயனாளிகள் பங்கேற்கும் வங்கி மூலம் டிஜிட்டல் வாலட்டைப் பயன்படுத்தி அதை தங்கள் அலைபேசி அல்லது சாதனத்தில் சேமிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
கியூஆர் குறியீடு காட்சிப்படுத்தப்படும் வணிக நிலையங்களில் தமது இலத்திரனியல் சாதனத்தைக் கொண்ட டிஜிட்டல் ரூபாயைப் பயன்படுத்த முடியும்.
ரிசர்வ் வங்கி பச்சைக்கொடி காட்டுவதால், நான்கு வங்கிகளும் தனித்தனியாக வர்த்தகர்கள் மற்றும் வாடிக்கையாளர்களை எதிர்வரும் நாட்களில் சோதனைப் பகுதியாக அழைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
“நாணய தாள்களுக்கான பயன்பாட்டு வழமையை மாற்றியமைப்பதை நாங்கள் காண்கிறோம். எதிர்காலத்தில், வலையமைப்பு இல்லாமலேயே பரிவர்த்தனை செய்ய முடியும். நாணயத்தாள்களை விட இது கொண்டிருக்கும் நன்மை பாதுகாப்பு மற்றும் கள்ளநோட்டு அபாயத்தை அகற்றும். இது செலவுகளைக் குறைக்கும். நாணயம் அச்சடிக்கும் செலவு குறையும்,'' என்று ஐடிஎஃப்சி வங்கியின் முகாமைத்துவ பணிப்பாளர் வி வைத்தியநாதன் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .