2025 ஜூலை 29, செவ்வாய்க்கிழமை

சூரியனாக மாறியது ; இரட்டை இலை

Freelancer   / 2022 ஜூன் 08 , பி.ப. 10:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழக முதல்வர் மு.கா ஸ்டாலின் வருகையை முன்னிட்டு, புதுக்கோட்டை நகரில்,  இரட்டை இலை வடிவிலான தெரு விளக்குகள் அகற்றப்பட்டு,  சூரியன் போன்ற விளக்குகள் பொருத்தப்பட்டன.

புதுக்கோட்டை நகரில், அண்ணா திராவிட முன்னேற்ற கழக (அ.தி.மு.க.இ) ஆட்சியில்,  இரட்டை இலை வடிவிலான தெருவிளக்குகள் பொருத்தப்பட்டன.

தேர்தல்களின் போது,  துணியால் மூடி,  இரட்டை இலை வடிவ தெரு விளக்குகள் மறைக்கப்படுவது வழக்கம்.
தமிழகத்தில், திராவிட முன்னேற்ற கழக (தி.மு.க.இ) ஆட்சி அமைந்து ஓராண்டுக்கு பின்  முதல் முறையாக,  தமிழக முதல்வர் மு.கா ஸ்டாலின்  புதுக்கோட்டைக்கு வருகிறார்.

இந்நிலையில்,  புதுக்கோட்டை நகராட்சி சார்பில் அமைக்கப்பட்ட இரட்டை இலை வடிவிலான தெருவிளக்குகள்  அகற்றப்பட்டு,  சூரியன் வடிவிலான தெரு விளக்குகள் புதிதாக அமைக்கப்பட்டுள்ளன. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .