Editorial / 2020 ஜூலை 13 , மு.ப. 11:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
சென்னையில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் இன்று(13) காலை நிலவரப்படி 14 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் 5 பேரும், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் ஒருவரும், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 3 பேரும், ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் 3 பேரும் உயிரிழந்துள்ளனர்.
மேலும் தனியார் மருத்துவமனையில் 2 பேரும் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது.
சென்னையில் 77 ஆயிரத்து 338 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 58 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குணம் அடைந்து உள்ளனர்.
17 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவுக்கு நேற்றுவரை 1,253 பேர் உயிரிழந்துள்ளனர்.
42 minute ago
57 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
57 minute ago
2 hours ago