2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

சோனியா காந்தி ஏன் பிரதமராக முடியாது?

Freelancer   / 2021 செப்டெம்பர் 26 , பி.ப. 07:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

கமலா ஹாரிஸ் அமெரிக்காவின் துணை ஜனாதிபதியானபோது, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி 2004ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்றபின் இந்தியப் பிரதமராகியிருக்கலாம் என்று மத்திய அமைச்சர் ராமதாஸ் அதவாலே தெரிவித்துள்ளார்.

பாஜக தலைமையிலான மத்திய அமைச்சரவையி்ல் அமைச்சராக இருக்கும் ராமதாஸ் அத்வாலே இந்த கருத்தைக் கூறியிருப்பது கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தலாம் என்று கூறப்படுகிறது.

கடந்த 2004ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு வெற்றி பெற்றபின்னர், பிரதமராக சோனியாகாந்தி தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பு இருந்தபோதும் வெளிநாட்டில் பிறந்தவர் எவ்வாறு இந்தியப் பிரதமராகலாம் என்று கூறி எதிர்ப்புக் கிளம்பியது. இந்நிலையில் ராமதாஸ் அத்வாலே இந்தக்கருத்தைத் தெரிவித்துள்ளார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .