Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2022 டிசெம்பர் 21 , பி.ப. 06:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலகிலேயே சிறந்த தரமான இருதலைமுறை பட்டு உற்பத்தி செய்யும் ஒரே பகுதியாக ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலம் காணப்படுகிறது.
உலகப் புகழ்பெற்ற இந்தியப் பட்டுப் பொருட்களின் உற்பத்திக்கு உகந்த காலநிலை காரணமாக, சர்வதேச தரத்தில் உள்ள ஏனைய தயாரிப்புகளும் பள்ளத்தாக்கில் தோன்றியுள்ளன.
நாட்டின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழிலுக்கு கிராமப்புற மற்றும் அரை நகர்ப்புறங்களில் சுமார் 9.76 மில்லியன் மக்களைப் பயன்படுத்தும் இந்தியா, உலகில் பட்டு உற்பத்தியில் இரண்டாவது இடத்தில் உள்ளது என்று இந்திய வணிக ஒப்புரவு அறக்கட்டளை தெரிவிக்கிறது.
நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பில் முக்கியப் பங்காற்றும் குறித்த தொழிற்றுறையில் மல்பெரி, எரி, தாசர் மற்றும் முகா ஆகிய நான்கு வகையான இயற்கை பட்டுகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
இந்தியாவில் பட்டு வளர்ப்பு நடவடிக்கைகள் 52,360 கிராமங்களில் பரவியுள்ளதுடன், பட்டு ஆடைகள், மேக்-அப்கள், துணிகள், நூல்கள், தரைவிரிப்புகள், சால்வைகள், தாவணிகள், குஷன் கவர்கள் மற்றும் பாகங்கள் மூலப்பொருட்களின் மூலம் உற்பத்தி செய்கிறது.
2021ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் டிசெம்பர் வரை, இந்தியா 26,587 மெற்றிக் தொன் பட்டு உற்பத்தி செய்தது. 2021-2022 ஆம் ஆண்டில் இந்தியாவில் மொத்த பட்டு உற்பத்தி 34,903 மெற்றிக் தொன்களாக இருந்ததுடன், இது முந்தைய ஆண்டை விட (33,770 மெற்றிக் தொன்) 3.4 சதவீதம் அதிகரித்துள்ளது.
நாட்டில் உற்பத்தி செய்யப்படும் ஏனைய பட்டு வகைகளில் மல்பெரி உற்பத்தியின் பங்கு மிகப்பெரியது.
நாட்டில் பட்டு உற்பத்தி செய்யும் முக்கிய மாநிலங்கள் ஆந்திரப் பிரதேசம், அசாம், பீகார், குஜராத், ஜம்மு காஷ்மீர், கர்நாடகா, சத்தீஸ்கர், மகாராஷ்டிரா, தமிழ்நாடு, உத்தரபிரதேசம் மற்றும் மேற்கு வங்காளம் ஆகியவை காணப்படுகின்றன.
2021-22 ஆம் ஆண்டில் நாட்டின் மொத்த பட்டு உற்பத்தியில் கர்நாடகா 32 சதவீத பங்களிப்பை அளித்துள்ளது. இதைத் தொடர்ந்து 2021-22 ஆம் ஆண்டில் ஒட்டுமொத்த பட்டு உற்பத்தியில் ஆந்திரப் பிரதேசம் 25 சதவீத பங்கைக் கொண்டிருந்தது.
இந்தியாவின் பட்டு மற்றும் பட்டுப் பொருட்களுக்கு உலகம் முழுவதும் அதிக கேள்வி உள்ளதுமன், உலகம் முழுவதும் 30 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது.
மொத்த ஏற்றுமதி பங்கில் அமெரிக்கா (29 சதவீதம்), அதைத் தொடர்ந்து ஐக்கிய அரபு அமீரகம் (10 சதவீதம்), சீனா (8 சதவீதம்), இங்கிலாந்து (4 சதவீதம்), ஆஸ்திரேலியா (8 சதவீதம்) ஆகிய நாடுகள் முக்கிய இறக்குமதியாளர்களாக காணப்படுகின்றனர்.
ஜேர்மனி, பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின், மலேசியா, நேபாளம், ஜப்பான், பெல்ஜியம், கனடா, தென் ஆப்பிரிக்கா மற்றும் சிங்கப்பூர் போன்ற நாடுகள் ஏனைய முக்கிய இறக்குமதியாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
16 minute ago
20 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
20 minute ago
1 hours ago
1 hours ago