2025 நவம்பர் 17, திங்கட்கிழமை

ஜம்மு – காஷ்மீரில் தாக்குதல் நடத்த சதி

R.Tharaniya   / 2025 நவம்பர் 06 , மு.ப. 11:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

'ஆப்பரேஷன் சிந்துார்' தாக்குதலுக்கு பதிலடியாக ஜம்மு - காஷ்மீரில் மீண்டும் தாக்குதல் நடத்த, லஷ்கர் - இ - தொய்பா மற்றும் ஜெய்ஷ் - இ - முகமது பயங்கரவாத அமைப்புகள் சதித் திட்டம் தீட்டியிருப்பதாக இந்திய உளவுத் துறை எச்சரித்துள்ளது.

ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய இராணுவம், 'ஆப்பரேஷன் சிந்துார்' நடவடிக்கையை மேற்கொண்டது. இதில் பாகிஸ்தான் கிளர்ச்சியாளர்களின் முகாம்கள் அழிக்கப்பட்டன.

மேலும், பாகிஸ்தான் இராணுவ விமானப்படை தளங்களும் பெருமளவில் சேதமடைந்தன.

இந்நிலையில், நம் இராணுவத்துக்கு பதிலடி கொடுக்க, லஷ்கர் - இ - தொய்பா மற்றும் ஜெய்ஷ் - இ - முகமது அமைப்புகள் சதித் திட்டம் தீட்டியிருப்பதாக இந்திய உளவுத் துறை எச்சரித்துள்ளது.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் ஜமாத் - இ - இஸ்லாமி, ஹிஜ்புல் முஜாஹிதீன் மற்றும் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. அதிகாரிகள் பங்கேற்ற உயர் மட்ட கூட்டம் கடந்த மாதம் நடந்ததாக தகவல் கிடைத்துள்ளது.

இந்த கூட்டத்தின் போது, இந்திய பாதுகாப்பு படைகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் பதிலடி கொடுக்கும் வகையில் தாக்குதலை நடத்த வேண்டும் என கிளர்ச்சியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டதாக  கூறப்படுகின்றது.
இதன் காரணமாக லஷ்கர் - இ - தொய்பா கிளர்ச்சியாளர்கள் காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள தங்களது ஆதரவாளர்களை அடையாளம் காணும் பணியில் இறங்கியுள்ளனர்.

இதனால், எல்லைப் பகுதியில் இந்திய பாதுகாப்பு படையினர் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X