2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

ஜல்லிக்கட்டு விவகாரம்; உச்ச நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு

Ilango Bharathy   / 2023 மே 18 , பி.ப. 01:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

“ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தத்  தடையில்லை” என உச்சநீதிமன்றம் இன்றைய தினம் தீர்ப்பளித்துள்ளது.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பொதுமக்கள் போராட்டம் நடத்திவந்த நிலையில், தமிழக அரசு அவசர சட்டம் கொண்டு வந்து ஜல்லிக்கட்டுப் போட்டியை  நடத்த வழிவகை செய்தது.

எனினும் ஜல்லிக்கட்டு போட்டிகளை அனுமதிக்கும் தமிழக  அரசின் குறித்த அவசர சட்டத்தை இரத்து செய்யக் கோரி விலங்கு நல வாரியம், பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத்  தொடர்ந்தன.

இந்நிலையில் அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட அரசியல் சாசன அமர்வு, மனுக்கள் மீதான தீர்ப்பை திகதி குறிப்பிடாமல் கடந்த ஆண்டு டிசம்பர் 12ஆம்திகதி  ஒத்தி வைத்தது.

இந்த நிலையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கில் ஜல்லிக்கட்டு போட்டிகளை அனுமதிக்கும் தமிழ்நாடு அரசின் சட்டத்தை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.

அத்துடன் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த அனுமதிக்கும் சட்டத்தை இயற்றுவதற்கும்  தமிழ்நாடு அரசுக்கு உரிமை உள்ளது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .