2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

ஜி 20 க்கு ஜின்பிங் வராததால் ஏமாற்றமடைந்த பைடன்

Editorial   / 2023 செப்டெம்பர் 04 , பி.ப. 03:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலக பொருளாதாரத்தை நேரடியாகவும், மறைமுகமாகவும் பாதிக்க கூடிய பிரச்சனைகள் குறித்து ஆராய்ந்து தீர்வு காண அமைக்கப்பட்டது உலகின் 19 நாடுகளையும், ஐரோப்பிய ஒன்றியத்தையும் உள்ளடக்கிய ஜி20 கூட்டமைப்பு.

இக்கூட்டமைப்பு, முதல் முறையாக 2008-ல் அமெரிக்காவின் வொஷிங்டனில் சந்தித்தது. தற்போது இம்மாதம் 9, 10 ஆகிய திகதிகளில் இந்திய தலைநகர் புதுடெல்லியில் இதன் அடுத்த உச்சி மாநாடு நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்க அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இந்தியாவிற்கு வருகை தருகிறார். ஆனால், ரஷ்ய ஜனாதிபதி  விளாடிமிர் புதின், இந்த மாநாட்டில் கலந்து கொள்ள போவதில்லை என்றும் புதினுக்கு பதிலாக ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்ஜி லவ்ரவ் பங்கேற்பார் எனவும் ரஷ்யா அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தது.

சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே, ரஷ்ய-உக்ரேன் போர் குறித்த மாறுபட்ட நிலைப்பாடுகள் காரணமாகவும், இரு நாட்டு பொருளாதார உறவில் எழுந்துள்ள பல்வேறு சிக்கல்கள் காரணாமாகவும், சமீப காலமாக இரு நாடுகளுக்கும் இடையே உறவு சுமூகமாக இல்லை. அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய இரு நாட்டு ஜனாதிபதிகளும் இந்த மாநாட்டில் பங்கேற்கும் போது சந்தித்து கொள்வார்கள் என்றும் அப்போது அவர்கள் இருவருக்கும் இடையிலான சிக்கல்களை தணிப்பது குறித்து பேச்சுவார்த்தை நடக்கலாம் எனவும் நம்பப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X