2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

தங்கத்தைப் பசையாக பூசிக் கடத்தல்

A.K.M. Ramzy   / 2021 ஓகஸ்ட் 31 , மு.ப. 09:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

கண்ணூர்;

2 லேயர் துணியால் தைக்கப்பட்டிருந்த ஜீன்ஸுக்குள் தங்கத்தை பசையாக பூசி, நூதனமான முறையில் கடத்தி வந்த வரை சுங்கத் துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

கேரள மாநிலம் கண்ணூர் விமான நிலையத்தில் சுங்கத் துறை அதிகாரிகள் நேற்று காலையில் பயணிகளிடம் வழக்கமான சோதனையில் ஈடுபட்டிருந்தனர். இதில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையிலான பயணி ஒருவரை சோதனையிட்டனர்.

உடனடியாக அவரைப்பரிசோதனை செய்தபோது, இதில் அவர் 2 லேயர் துணியால் தைக்கப்பட்டிருந்த ஜீன்ஸ் அணிந்திருந்தது தெரியவந்தது. மேலும், அந்த ஜீன்ஸில் ஒரு துணிக்கும் மற்றொரு துணிக்கும் இடையில் தங்கத்தை பசையாக பூசி கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பெயின்ட் பூசியது போல ஜீன்ஸ் துணியின் நீளம் முழுவதும் மெல்லிய லேயரில் தங்கம் பூசப்பட்டிருப்பதை கண்டு அதிகாரிகள் வியப்படைந்தனர். தங்கத்தை நகைகளாகவும் பிஸ்கட்களாகவும் பறிமுதல் செய்து வந்த அதிகாரிகள் இந்த முறை பேஸ்ட் வடிவில் பறிமுதல் செய்துள்ளனர்.

இந்த சோதனையில் ரூ.14 இலட்சம் மதிப்புள்ள 302 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், அந்தப் பயணியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .