2025 மே 12, திங்கட்கிழமை

தந்தைக்கு நேர்ந்த சோகம்; கண்ணீரில் முடிந்த கதை

Ilango Bharathy   / 2023 மே 21 , மு.ப. 09:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

உயிரிழந்த மகளின் உடலை தந்தையொருவர் மோட்டார் சைக்கிளில் எடுத்துச் சென்ற சம்பவம் மத்தியப்பிரதேசத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  

மத்தியப்பிரதேசத்தின் ஷதோலில் உள்ள அரசு மருத்துவமனையில் உயிரிழந்த மகளின் உடலை எடுத்து செல்ல அம்புலன்ஸ் வசதி மறுக்கப்பட்டதால், உடலை மோட்டார் சைக்கிளில் வைத்து 70 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள கிராமத்திற்கு தந்தையொருவர் எடுத்துச்  சென்றுள்ளார்.

தங்களது கிராமம் மருத்துவமனையிலிருந்து 15 கிலோ மீற்றருக்கு மேல் இருந்ததால், அம்புலன்ஸ் வசதி மறுக்கப்பட்டதாகவும், பண வசதி இல்லாததால் தனியார் அம்புலன்சுக்கு ஏற்பாடு செய்ய முடியவில்லை என்றும் தந்தை தெரிவித்துள்ளார்.

இதனிடையே, கிராமத்தை அடைய 20 கிலோ மீற்றர் இருந்த நிலையில், சாலையில் இவர்களை கண்ட ஷதோல் மாவட்ட ஆட்சியர், வாகனத்தை ஏற்பாடு செய்து தந்ததுடன், சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X