2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

தனியார் நிறுவனங்களுக்குப் புதிய கட்டுப்பாடு

Ilango Bharathy   / 2022 டிசெம்பர் 05 , மு.ப. 10:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெங்களூரில் தனியார் நிறுவனமொன்றில் பணிபுரிந்து வந்த  கேரளாவைச் சேர்ந்த இளம் பெண்ணொருவர், அண்மையில்  நள்ளிரவு வேளை மோட்டார் சைக்கிள்  டாக்சியொன்றில்  பயணித்த போது, அதன் சாரதி மற்றும் அவரது நண்பரால் கூட்டுப்   பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.

இச்சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் ”வாடகை கார்கள், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டிகளை இயக்கும் தனியார் நிறுவனங்கள் , குற்றப்பின்னணி யைக் கொண்டவர்களைப்  பணியில் சேர்க்கத் தடை விதித்து பெங்களூர்   பொலிஸார் உத்தரவிட்டுள்ளனர்.

பெண் பயணிகளின் பாதுகாப்பு குறித்து ‘பெங்களூர் பொலிஸ் கமிஷனர் பிரதாப் ரெட்டியின்‘ அலுவலகத்தில், வாடகை வாகன சேவை நிறுவனங்களின் உரிமையாளர்கள் மற்றும் அதன் பிரதிநிதிகளுடன் நடத்தப்பட்ட ஆலோசனைக் கூட்டத்தின் போதே இவ் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்போது வாடகை வாகன சேவை நிறுவனங்கள் குற்றப்பின்னணியைக்  கொண்ட சாரதிகளை  எக்காரணம் கொண்டும் பணியில் சேர்க்கக் கூடாது எனவும், அவர்களது நடத்தை குறித்து  மாதம் ஒரு முறை கண்காணிக்கப்படவேண்டும் எனவும், சாரதிகள் தவறு செய்தால் அதற்கு சம்பந்தப்பட்ட நிறுவனமே பொறுப்பு ஏற்கவேண்டும் எனவும், அந் நிறுவனங்கள் மீது கடுமையான  நடவடிக்கைகள்  எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .