2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

தம்பியின் உயிரைப் பறித்த சிறுவன்

Ilango Bharathy   / 2022 டிசெம்பர் 20 , மு.ப. 09:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ராமநகர் மாவட்டம்,  கனகபுரா கிராமத்தைச்  சேர்ந்தவர்  ‘மல்லேஷ்‘. விவசாயியான இவருக்கு சொந்தமாகத்  தோட்டமொன்று உள்ளது.

குறித்த தோட்டத்தில் கணவன் ,மனைவியென இருவர் பணிபுரிந்து வந்துள்ளனர். இவர்களுக்கு 16 மற்றும் 7 வயதில் இரு மகன்மார்கள் உள்ளனர்.

 இந்நிலையில் நேற்று முன்தினம் காலை, மல்லேசின் தோட்டத்தில் குறித்த தம்பதியினர்  பணிபுரிந்து செய்துகொண்டிருந்த போது அங்கு சிறுவர்கள் விளையாடிக்  கொண்டு இருந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இச் சந்தர்ப்பத்தில் தோட்டத்தில் உள்ள பண்ணை வீட்டிற்குள் சென்ற சிறுவர்கள் இருவரும் அங்கு சுவரில் தொங்க விடப்பட்டு இருந்த நாட்டு துப்பாக்கியை எடுத்து விளையாடிக் கொண்டு இருந்துள்ளனர் எனக்  கூறப்படுகின்றது.

இதன்போது  அண்ணன் எதிர்பாராதவிதமாக டிரிக்கரை அழுத்திய நிலையில் அதிலிருந்து வெளியேறிய குண்டு தம்பியின் மீது பாய்ந்ததில்  சம்பவ இடத்திலேயே தம்பி உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார், பாதுகாப்பு நடைமுறைகளைப்  பின்பற்றாமல் துப்பாக்கியை வீட்டில் வைத்திருந்ததாகக் கூறி மல்லேஷ் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.

இச்சம்பவமானது  அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .