2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

தலையணையுடன் உடலுறவு; கல்லூரிக்குக் காத்திருந்த அதிர்ச்சி

Ilango Bharathy   / 2022 டிசெம்பர் 14 , பி.ப. 04:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூரில் உள்ள அரச மருத்துவக் கல்லூரியொன்றில் பகிடிவதை நடப்பதாக பல்கலைக்கழக மானியக் குழுவின் உதவி எண்ணுக்கு புகாரொன்று அண்மையில் வந்துள்ளது.  

எனினும் பகிடிவதையில் ஈடுபடுபவர்கள் யார் என்பது குறித்தத் தகவல் தெரிவிக்கப்படவில்லை.

இதையடுத்து, பெண் பொலிஸ் அதிகாரியொருவர் மாணவியாக குறித்த  கல்லூரிக்குள் நுழைந்து, அங்குள்ள மாணவர்களுடன் நன்றாகப் பேசி பகிடி வதையில் ஈடுபடும் மாணவர்கள் குறித்த தகவலைத் திரட்டியுள்ளார்.

அந்தவகையில் குறித்த கல்லூரியின் மூத்த மருத்துவ மாணவர்கள் 11 பேர், இளநிலை மாணவர்களை மிகவும் கொடுமையான விதத்தில் பகிடி வதை செய்து வந்துள்ளமை தெரிய வந்துள்ளது. 

மேலும் குறித்த மாணவர்கள்,  இளநிலை மாணவர்களை தலையணையுடன் உடலுறவு கொள்வது போன்று நடித்துக் காட்டுமாறு வற்புறுத்தி வந்துள்ளமையும் தெரியவந்துள்ளது. 

இந்நிலையில் இச்சம்பவத்துடன் தொடர்புடைய 11 மாணவர்களும்  மூன்று வாரங்களுக்கு கல்லூரியில் இருந்து தற்காலிகமாக  நீக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே சமயம் குறித்த பெண் பொலிஸ் அதிகாரியின் செயலானது மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .