2025 ஜூலை 23, புதன்கிழமை

தாயின் சடலத்துடன் 4 நாட்கள்; ஊதுபத்தி ஏற்றிவைத்த மகன்

Ilango Bharathy   / 2022 டிசெம்பர் 18 , மு.ப. 09:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 உத்தரப்பிரதேசம், கோரக்பூரைச் சேர்நதவர் சாந்தி தேவி. 82 வயதான இவர்  ஓய்வு பெற்ற ஆசிரியராவார்.

இவருக்கு நிகல்( 45) என்ற மனநலம் பாதிக்கப்பட்ட மகன் ஒருவர் உள்ளார் எனவும், அவரது 2 பிள்ளைகளும் டெல்லியில் படித்து வருகின்றனர் எனவும் கூறப்படுகின்றது.

அத்துடன் நிகில் உடல்நலம் பாதிக்கப்பட்ட  தனது தாயுடன் வசித்து வந்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது,

இந்நிலையில் சாந்தி தேவியின் வீட்டில் இருந்து கடந்த 13 ஆம் திகதி  திடீரென துர்நாற்றம் வீசியதால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் இது குறித்து பொலிஸாருக்குத் தெரியப்படுத்தியுள்ளனர்.

இதனையடுத்து சம்பவ இடத்துக்கு சென்றபொலிஸார், படுக்கை அறையிலுள்ள கட்டிலின் அடியில் இருந்து சாந்தி தேவியின் சடலத்தை மீட்டனர்.

மேலும் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் ”தனது  தாய் 4 நாட்களுக்கு முன் உடல் நலக்குறைவால் இறந்துவிட்டார் எனவும், என்னசெய்வது எனத் தெரியாமல் தாயின் உடலை கட்டிலுக்கு அடியில் வைத்து விட்டு 4 நாட்களாக வீட்டிலேயே இருந்ததாகவும், துர்நாற்றம் வீசும்போது ஊதுவர்த்தி கொளுத்தி வைத்திருந்ததாகவும்  நிகில் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் மனநலம் பாதிக்கப்பட்ட நிகில் போதைக்கு அடிமையானவர் என்றும் அடிக்கடி அவர் தாயை தாக்கி வந்தார் எனவும், நிகிலின் செயல்களால் மனஉளைச்சலுக்கு ஆளான அவரது மனைவி கடந்த 15 நாட்களுக்கு முன்னர் தனது  தாயின் வீட்டிற்குச் சென்றுவிட்டார் எனவும் அக்கம்பக்கத்தினர்  தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இது குறித்த தீவிர விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .