2025 ஜூலை 19, சனிக்கிழமை

தாயைக் கொன்று உடலை சூட்கேசில் மறைத்த மகள்

Freelancer   / 2023 ஜூன் 14 , பி.ப. 07:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனது தாய்க்கும், தனது மாமியாருக்கும் இடையில் அடிக்கடி ஏற்படும் தகரால், கடும் மன உளைச்சலுக்கு உள்ளாகியிருந்த வைத்தியரான பெண், தனது தாயை படுகொலைச் செய்து சூட்கேசில் மறைத்துவைத்து, பொலிஸூக்கு எடுத்துச் சென்ற சம்பவம் மேற்கு வங்களாத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வைத்தியரான 39 வயதான அந்தப் பெண்,  தனது தாய்மற்றும்தன்னுடையகணவர், குழந்தைகள், மாமியாருடன் பெங்களூருவில் குடியேறினார்.

உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள அவரது தாய்க்கும், மாமியாருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான பெண், தாய்உயிருடன் இருந்தால் தானே இந்தப் பிரச்சினைகள் எனக்கருதி, ஓர் அறையில் படுத்திருந்த தாயின் கழுத்தை கைகளால் நெரித்து கொலை செய்துள்ளார்.

தாயின் உடலை டிராலி பேக்கில் திணித்து வைத்துள்ளார். பின்னர் அவர் அந்த டிராலி பேக்குடன் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்துக்குச் சென்று அங்கிருந்த பொலிஸாரிடம், நடந்த சம்பவத்தை கூறி சரண் அடைந்தார்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X