2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

திருடனுக்கு கௌரவிப்பு

Editorial   / 2023 செப்டெம்பர் 04 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

குற்றச்சம்பவங்களில் ஈடுபடும் திருடர்கள் கையில் அகப்பட்டால் அவர்களுக்கு தர்மஅடி கொடுத்து பொலிஸில் ஒப்படைப்பதை கேள்விப்பட்டிருப்போம். ஆனால் பஞ்சாப்பில் மோட்டார் சைக்கிள் திருடர்களுக்கு கிராம மக்கள் மாலை அணிவித்து மரியாதை செய்த காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. பாட்டியாலாவில் உள்ள கிராமங்களில் அடிக்கடி மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட பொருட்கள் திருட்டு போயுள்ளது.

இதுதொடர்பாக பொலிஸில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் கிராம மக்களே கொள்ளையர்களை பிடிக்க ரோந்து சென்றனர். அவ்வாறு சென்றபோது அங்குள்ள ஒரு கிராமத்தில் மோட்டார் சைக்கிள் திருடிய ஒருவரை பொதுமக்கள் மடக்கி பிடித்தனர். உடனே அவருக்கு கழுத்தில் மாலை அணிவித்து கைத்தட்டி மரியாதை செய்ததோடு, அதை வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பரப்பினர். இதுகுறித்து அந்த பகுதி பொதுமக்கள் கூறுகையில், நாங்கள் இவ்வாறு செய்தால் திருடர்கள் மீண்டும் திருட மாட்டார்கள் என்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X