2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

திருப்பதியில் ரூ. 3 கோடி உண்டியல் வருவாய்

Freelancer   / 2021 செப்டெம்பர் 29 , பி.ப. 07:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று ரூ.2.95 கோடி உண்டியல் வருவாயாக கிடைத்ததுள்ளது. ஒரு வருடத்துக்குப் பின்னர், உண்டியல் வருமானம் மீண்டும் ரூ.3 கோடி அளவுக்கு வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கொரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் தரிசனம் செய்யும் பக்தர்கள் எண்ணிக்கை 3 ஆயிரமாக குறைக்கப்பட்ட போதும் குறைந்த அளவிலான பக்தர்கள் தரிசனத்திற்கு வந்தனர்.
 
இதனால் திருப்பதி தேவஸ்தானத்துக்கு ரூ.5 முதல் 10 லட்சம் வரை மட்டுமே தினமும் வருவாய் கிடைத்து வந்தது. மேலும் பக்தர்கள் தங்கும் அறை வாடகைகள், லட்டு விற்பனை உள்ளிட்ட இதர வருவாய்கள் வெகுவாகக் குறைந்தன.

கொரோனா தொற்று பரவல் படிப்படியாக குறைந்ததையடுத்து பக்தர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டன. இந்த நிலையில் ரூ.300 கட்டணத்தில் 8,000 தரிசன டிக்கெட்டுகளும், 8,000 இலவச தரிசன டிக்கெட்களும் வெளியிடப்பட்டு தினமும் 30 ஆயிரம் பக்தர்கள் வரை தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர்.

இதனால் திருப்பதியில் தரிசனத்துக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கணிசமாக உயர்ந்து வருவதுடன், உண்டியல் மற்றும் அறை வாடகை உள்ளிட்ட இதர வருவாய்களும் அதிகரித்து வருகின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .