2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

திருமண ஆசை காட்டி நண்பனை பெண்ணாக மாற்றிய வாலிபர்

Freelancer   / 2023 ஓகஸ்ட் 17 , பி.ப. 08:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆந்திர மாநிலம் கிருஷ்ண லங்கா பகுதியை சேர்ந்தவர் நாகேஸ்வரராவ். இவருக்கு அதே பகுதியை சேர்ந்த மற்றொரு வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டு. இருவரும் நெருங்கிய நண்பர்களாக மாறினர். இந்த நெருக்கம் இருவரிடையே தன்பாலின ஈர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இருவரும் வெவ்வேறு பெண்களை திருமணம் செய்து கொண்டால் தனித்தனியாக பிரிந்து விடுவோம் என எண்ணி “நாம் இருவரும் திருமணம் செய்து கொண்டு ஒன்றாக இருக்கலாம்” என நாகேஸ்வரராவ் ஆசை வார்த்தை கூறியுள்ளார்.அதன்படி நண்பர்களில் யாராவது ஒருவர் பெண்ணாக மாற வேண்டும் என்றபோது நாகேஸ்வர ராவின் நண்பர் பெண்ணாக மாற ஒப்புக்கொண்டுள்ளார்.

இதனையடுத்து நாகேஸ்வரராவின் நண்பர் அறுவை சிகிச்சை மூலம் தன்னை பெண்ணாக மாற்றிக் கொண்ட பின்னர் நாகேஸ்வரராவிடம் இருவரும் திருமணம் செய்து கொள்ள கேட்டபோது நாகேஸ்வர ராவ் நீ அழகாக இல்லை அதனால் உன்னை திருமணம் செய்ய முடியாது என மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த நாகேஸ்வரராவின் நண்பர் பெண்ணாக மாறினால் திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றி விட்டதாக கிருஷ்ண லங்கா பொலிஸில் முறைப்பாடு செய்தள்ளார்.  இதனையடுத்து பொலிஸார் வழக்கு பதிவு செய்து நாகேஸ்வரராவை கைது செய்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X