2025 ஜூலை 19, சனிக்கிழமை

திருமணம் ஆகாதவர்களுக்கு ஊக்கத்தொகை

Freelancer   / 2023 ஜூலை 06 , பி.ப. 08:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹரியானா மாநிலம் கர்னல் மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் குறைத்தீர் கூட்டத்தில் அம்மாநில முதல் மந்திரி மனோகர் லால் கட்டார் பங்கேற்று மக்களின் குறைகளை கேட்டறிந்தார். 

அப்போது திருமணம் ஆகாத 60 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் ஊக்கத்தொகை குறித்து அளித்த புகாருக்கு பதிலளித்த மனோகர் லால் கட்டார், அரியானாவில் திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் மாதாந்திர ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவித்தார்.

இந்த அறிவிப்பின்படி, 45 வயது முதல் 60 வயதுவரை திருமணம் ஆகாத நபர்களுக்கு அரசு விரைவில் உதவித் தொகை வழங்க அம்மாநில அரசு திட்டமிட்டயுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் 2 இலட்சம் பேர் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த திட்டம் குறித்து ஒரு மாதத்துக்குள் அரசு முடிவெடுக்கும் எனவும் அரியானா மாநில முதல் மந்திரி மனோகர் லால் கட்டார் தெரிவித்தார்.

மூத்த குடிமக்கள், கைம்பெண்கள், மாற்று திறனாளிகள், மாற்று பாலினத்தவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வரும் நிலையில் தற்போது திருமணம் ஆகாதவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படவுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X