2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

திருமதி உலக அழகிப் பட்டத்தை வென்றார் சர்கம் கௌசல்

Ilango Bharathy   / 2022 டிசெம்பர் 21 , மு.ப. 09:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 2022ஆம் ஆண்டிற்கான திருமதி உலக அழகி பட்டத்தை இந்தியாவைச் சேர்ந்த சர்கம் கௌசல்( Sargam Koushal) தட்டிச் சென்றுள்ளார்.

திருமணமான  பெண்களுக்கான உலக அழகி போட்டியானது கடந்த 1984ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகின்றது.

அந்தவகையில் அமெரிக்காவில் உள்ள லாஸ் வேகாஸ் நகரில்  நேற்று முன்தினம் நடைபெற்ற 2022ஆம் போட்டியில்  இந்தியாவைச் சேர்ந்த சர்கம் கௌசல், திருமதி உலக அழகி பட்டம் வென்றுள்ளார்.

 இதன்மூலம்  21 ஆண்டுகளுக்குப் பின்னர்  இந்தியாவுக்கு அவர் பெருமை சேர்த்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இந்நிலையில் இது குறித்து கௌசல் கருத்துத் தெரிவிக்கையில் “நான்  ஜம்மு காஷ்மீரில் உள்ள ஒரு கல்லூரியில் ஆங்கில இலக்கியத்தில் முதுகலை பட்டம் பெற்றேன்.

தற்போது விசாகப்பட்டினத்தில் உள்ள ஒரு பாடசாலை  ஆசிரியராகப் பணியாற்றி வருகிறேன். எனது கணவர் இந்திய கடற்படையில் பணியாற்றி வருகிறார்.  என்னால் 21 ஆண்டுகளுக்குப் பின்னர்  இக் கிரீடம்  இந்தியாவுக்குக் கிடைத்துள்ளது. இது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .